இந்த அலுவலகங்கள் 3 நாட்கள் செயல்படாது.. சட்டசபை செயலாளர் அறிவிப்பு..!

இந்த அலுவலகங்கள் 3 நாட்கள் செயல்படாது.. சட்டசபை செயலாளர் அறிவிப்பு..!

Update: 2022-07-15 18:03 GMT

ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதையொட்டி, புதுச்சேரியில் முதல்வர் மற்றும் அமைச்சர் அலுவலகங்கள் 3 நாட்கள் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சட்டசபை செயலாளர் முனுசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வருகிற 18-ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை அமைதியாகவும், நேர்மையான முறையில் நடத்திடவும் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வாக்காளர்கள், வேட்பாளர்கள் மற்றும் அவர்களால் அங்கீகாரம் அளிக்கப்பட்ட முகவர்கள், தலைமை தேர்தல் அதிகாரி, துணைத்தலைமை தேர்தல் அதிகாரி, தேர்தல் பார்வையாளர், தேர்தல் தொடர்பான பணியில் இருக்கும் அலுவலர்கள், ஊழியர்கள், ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட செய்தி மற்றும் தகவல் தொடர்பு சாதன பணியாளர்கள் மட்டுமே சட்டசபை வளாகத்துக்குள் வருவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.

எனவே, சபாநாயகர் செல்வம், முதல்வர் ரங்கசாமியிடம் கலந்து ஆலோசித்து சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இதன்படி, நாளை (16-ம் தேதி), மறுநாள் (17-ம் தேதி) மற்றும் தேர்தல் நடைபெறும் 18-ம் தேதி சட்டசபை வளாகத்தில் செயல்படும் சட்டசபை செயலகம், அமைச்சரவை செயலகம், சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் அலுவலகங்கள், முதல்வர் மற்றும் இதர அமைச்சர் அலுவலகங்கள் உட்பட அனைத்து அலுவலகங்களும் செயல்படாது” என்று கூறப்பட்டுள்ளது.

Similar News