திருச்செந்தூர் கோவில் – தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளலாம்!!

திருச்செந்தூர் கோவில் – தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளலாம்!!

Update: 2022-04-02 09:29 GMT

திருச்செந்தூர் கோவிலில் கூடுதல் பணியாளர்கள் நியமனம், காவல்துறை பாதுகாப்பு, விஐபி தரிசனம் குறித்து தனி நீதிபதி அளித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திருசுந்தரராக பணியாற்றும் சீதாராமன் தன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கினை விசாரித்த தனி நீதிபதி வழக்கு சம்பந்தமாக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார். கோயிலில் கூட்டத்தை கட்டுப்படுத்த பணியாளர்களை அதிகரிப்பது, விஐபி தரிசனங்களை முறைபடுத்துவது, அடிப்படை வசதிகள் செய்து தருவது போன்ற பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது.

தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்யக்கோரி ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி திருக்கோயில் சுதந்திர பரிபாலனா ஸ்தலத்தார் சபை தலைவர் குமார் ஐயர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில், இந்த வழக்கு சேவை சம்பந்தமாக தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இதனை பொதுநலன் வழக்காக விசாரணை செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

எனவே, இந்த தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. னையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

newstm.in

Similar News