தென் மாவட்டத்துக்கான இந்த எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல் ரத்து

தென் மாவட்டத்துக்கான இந்த எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல் ரத்து

Update: 2022-02-24 06:28 GMT

இரட்டை ரயில் பாதை மற்றும் மின்மயமாக்கல் பணிகள் எப்போது முடியும் என மக்களும் எதிர்பார்த்து உள்ளனர். 

தென் மாவட்டங்களில் இரட்டை ரயில் பாதை மற்றும் மின்மயமாக்கல் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட புனலூர்-கொல்லம் ரயில்வே பாதையில் மின்மயமாக்கல் பணி தற்போது நடந்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து இந்த பணிகளை விரைவாக நடத்திடும் வகையில் செங்கோட்டை-கொல்லம், கொல்லம்- செங்கோட்டை சிறப்பு ரயில்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் மார்ச் மாதம் 15ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இந்த தகவலை தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தென் மாவட்டங்களில் இரட்டை ரயில் பாதை மற்றும் மின்மயமாக்கல் பணிகள் விரைவில் முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி பணிகள் முடிவுபெற்ற பின், அனைத்து ரயில்களும் எவ்வித க்ராசிங் பிரச்சனையும் இல்லாமல் உரிய நேரத்துக்கு கடந்த  செல்ல முடியும் எனவும் ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதனால் இரட்டை ரயில் பாதை மற்றும் மின்மயமாக்கல் பணிகள் எப்போது முடியும் என மக்களும் எதிர்பார்த்து உள்ளனர். 

newstm.in

Similar News