இதுதான் தமிழ்நாடு! ஹிஜாப் அணிந்த அதிகாரியிடம் சான்றிதழ் பெற்ற பாஜக வேட்பாளர்!!

இதுதான் தமிழ்நாடு! ஹிஜாப் அணிந்த அதிகாரியிடம் சான்றிதழ் பெற்ற பாஜக வேட்பாளர்!!

Update: 2022-02-23 07:40 GMT

தென்காசி நகராட்சியில் ஹிஜாப் அணிந்த தேர்தல் அதிகாரியிடம் பாஜக வேட்பாளர் தனது வெற்றிச்சான்றிதழை பெற்ற நிகழ்ந்து நடந்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முடிவுகள் நேற்று வெளியானது. இதில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. வாக்கு எண்ணிக்கையின் போது பல சுவையான சம்பவங்கள் நிகழ்ந்தன. அந்த வகையில் ஹிஜாப் அணிந்த தேர்தல் அதிகாரியிடம் பாஜக வேட்பாளர் தனது வெற்றிச்சான்றிதழை பெற்ற நிகழ்வு நடந்துள்ளது.

வாக்குப்பதிவின் போது மதுரை மாவட்டம் மேலூரில் ஹிஜாப்பிற்கு எதிராக பாஜக முகவர் ஆர்ப்பாட்டம் செய்தது சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் வெற்றிச் சான்றிதழை பாஜக வேட்பாளர் ஹிஜாப் அணிந்த பெண்ணிடம் இருந்து சத்தமின்றி வாங்கிச் சென்றிருப்பதை நெட்டிசன்கள் இதுதான் தமிழ்நாடு என்று கூறி வருகின்றனர்.  

தென்காசி நகராட்சி ஆணையராக இஸ்லாமிய பெண் பணியாற்றி வருகிறார். இந்த பெண் அதிகாரி ஹிஜாப் அணிந்தபடி பணியாற்றினார். அந்த அதிகாரியிடம் வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் சான்றிதழை பெற்றுச் சென்றனர்.

தென்காசி நகராட்சியில் 8ஆவது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பொன்னம்மாள் கவுன்சிலராக வெற்றிபெற்றார். இதற்கான வெற்றிச்சான்றிதழை அவர் பெற்ற நிகழ்வு தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

அன்று எந்த ஹிஜாப்பை கழற்ற வேண்டும் என பாஜக முகவர் தகராறு செய்தாரோ, இன்று அதே ஹிஜாப் அணிந்த பெண்ணின் கையால் பாஜகவை சேர்ந்தவர் சான்றிதழ் பெற்றிருக்கிறார். இதனைச் சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

newstm.in

Similar News