மகள் தந்தை மேல் வைத்திருக்கும் பாசத்திற்கு இது ஒரு சிறந்த உதாரணம்..!! குவியும் வாழ்த்துக்கள்..!!

மகள் தந்தை மேல் வைத்திருக்கும் பாசத்திற்கு இது ஒரு சிறந்த உதாரணம்..!! குவியும் வாழ்த்துக்கள்..!!

Update: 2022-06-05 04:55 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்து உள்ள தனகனந்தல் கிராமத்தில் வசித்து வருபவர் பத்மாவதி. இவருடைய கணவர் செல்வராஜ் (56) கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில், செல்வராஜின் இளைய மகள் மகேஷ்வரிக்கும், திருக்கோவிலூர் பகுதியல் அச்சகம் நடத்தி வரும் ஜெயராஜ் என்பவருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. உயிருடன் இருக்கும் போது மகளின் திருமணத்தை நடத்த வேண்டும் என செல்வராஜ் திட்டமிட்டிருந்த நிலையில் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

தந்தை மீது அதிக பாசம் கொண்ட மகேஷ்வரி தனது திருமணத்துக்கு தந்தை இல்லையே என சோகத்தில் இருந்துள்ளார். எனவே தந்தையின் கடைசி ஆசையை நிறைவெற்றும் வகையில், இந்த குறையை போக்க பத்மாவதி குடும்பத்தினர் ஒரு நெழ்ச்சியான சம்பவத்தை செய்துள்ளனர்.

அதன்படி, பத்மாவதி குடும்பத்தினர் 5 லட்சம் ரூபாய் செலவில் செல்வராஜின் மெழுகு சிலையை தயாரித்து, பட்டு வேஷ்டி, சட்டை அணிந்து அமர்ந்து இருப்பதுபோல் மெழுகுசிலை தத்ரூபமாக உருவாக்கினார்கள். அப்போது பெற்றோர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற மகேஸ்வரி, தந்தை செல்வராஜியின் மெழுகுசிலையை பார்த்து கண்ணீர் விட்டு அழுதார்.இந்த திருமண விழாவிற்கு வந்த உறவினர்கள் நெகிழ்ச்சி அடைந்து மணப்பெண்ணை தேற்றினார்கள்.

இதேபோன்று கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி இறந்துபோன தம்பியின் மெழுகு சிலை மடியில் வைத்து தனது 2 குழந்தைகளின் காதணி விழாவை நடத்திய அக்காவின் பாசமிக்க சம்பவம் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடந்ததுள்ளது.

Similar News