இது வீரர்களை வரவேற்கும் பாடல்.. பிரதமரை அல்ல.. அமைச்சர் நச் பதில் !!
இது வீரர்களை வரவேற்கும் பாடல்.. பிரதமரை அல்ல.. அமைச்சர் நச் பதில் !!
44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந்தேதி மாமல்லபுரத்தில் தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளது. இதனிடையே இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு 4ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், குரங்கு அம்மை பாதித்த நாடுகளில் இருந்து வரும் வீரர்கள் பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு பிறகே போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். வீரர்கள், பார்வையாளர்களுக்கு 344 மருத்துவ பணியாளர்கள் மூலம் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அப்போது, செஸ் ஒலிம்பியாட் தொடர்பான வரவேற்பு பாடலில் பிரதமர் நரேந்திர மோடி படம் இடம்பெறாதது குறித்த கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஒலிம்பியாட் வரவேற்பு பாடல், வீரர்களை வரவேற்பதற்கான பாடல் தானே தவிர பிரதமரை வரவேற்பதற்கான பாடல் அல்ல என சுட்டிக்காட்டினார். வீரர்களை வரவேற்கும் பாடல் என்பதால் பிரதமர் படம் இடம்பெறவில்லை என்றும் குறிப்பிட்டார்.
newstm.in