ஏப்ரல் முதல் இதெல்லாம் மாறப்போகிறது!!

ஏப்ரல் முதல் இதெல்லாம் மாறப்போகிறது!!

Update: 2022-03-28 09:30 GMT

ஏப்ரல் 1 முதல் புதிய நிதியாண்டு தொடங்குவதால் பல்வேறு புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன.

ஒவ்வொரு மாதமும் தொடக்கத்தில் கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்படுவது வழக்கம். இம்மாதம் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில், ஏப்ரல் மாதத்திலும் சிலிண்டர் விலை உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனியர் சிட்டிசன் சேமிப்புத் திட்டம், தபால் அலுவலக மாத வருமானத் திட்டம், தபால் அலுவலக டெபாசிட் ஆகியவற்றில் முதலீடு செய்தவர்களுக்கு இனி வட்டித் தொகை ரொக்கமாக செலுத்தப்படாது. நேரடியாக வங்கிக் கணக்குக்கு வட்டி தொகை வந்துவிடும்.

ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் ஆதார் - பான் கார்டுகளை இணைக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

ஏப்ரல் 1ஆம் தேதி முதல், PF கணக்கில் ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் பங்களிப்பு இருந்தால், வட்டித் தொகைக்கு வரி வசூலிக்கப்படும்.

கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு 30% வரி விதிக்கப்படும் என கடந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்த 30% வரி வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

newstm.in

Similar News