மாணவர்கள் இப்படித்தான் பள்ளிக்கு வரணும்.. தலைமையாசிரியர் அதிரடி..!

மாணவர்கள் இப்படித்தான் பள்ளிக்கு வரணும்.. தலைமையாசிரியர் அதிரடி..!

Update: 2022-03-21 13:09 GMT

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் நேற்று ‘நம் பள்ளி; நம் பெருமை’ என்ற தலைப்பில் பள்ளி மேலாண்மைக் குழுவினர் மற்றும் பெற்றோர் கலந்துகொண்ட கலந்துரையாடல் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.

அந்த வகையில், மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நம் பள்ளி, நம் பெருமை என்ற தலைப்பில் மாணவ - மாணவியரின் பெற்றோர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது.

இந்தக் கூட்டத்தில் பேசிய தலைமையாசிரியை ஏஞ்சலின் மெர்சி,  “இப்பள்ளிக்கு வரும் மாணவர்கள் பலர் சரியாக தலை முடி வெட்டிக்கொண்டும், சீருடை அணிந்து கொண்டும் வருவதில்லை.

முடியை காடு போல் வளர்த்துக் கொண்டு, விதவிதமான ஹேர் ஸ்டைல் வைத்துக் கொண்டு வருகின்றனர். இதனால், ஒரு மாணவனை சரியாக அடையாளம் காண முடியவில்லை. தற்போதுள்ள நிலையில், ஆசிரியர்களும் மாணவர்களை கண்டிக்க முடியவில்லை.

அப்படி கண்டித்தாலும், ஆசிரியர்களை அவர்கள் மதிப்பது இல்லை. பெற்றோர்களாகிய நீங்கள்தான் உங்கள் பிள்ளைகளை கண்டித்து, ராணுவ வீரர் போல் முடிவெட்டி, நல்ல முறையில் சீருடை அணிந்து பள்ளிக்கு அனுப்ப வேண்டும்” என்றார்.

Similar News