நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளதாக பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் தெரிவித்துள்ளார்.

பிரபல ஹாலிவுட் நடிகரான பிராட் பிட் நடித்துள்ள ‘புல்லட் டிரெய்ன்’ எனும் ஹாலிவுட் படம் வரும் ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பிராட் பிட் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், “30 வருடமாக நடித்துக் கொண்டிருக்கிறேன். அதிகமாக உழைத்து விட்டேன். இனி எனக்கு ஓய்வு தேவைப்படுகிறது. வயதும் கூடிக்கொண்டே செல்கிறது.

தொடர்ந்து என்னால் நடிக்க முடியும் என்றாலும் ஒரு கட்டத்துக்கு பிறகு புதியவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்குவது தான் நல்லது. நானும் அந்த கட்டத்துக்கு இப்போது வந்திருக்கிறேன்.

‘புல்லட் டிரெய்ன்’ படம் தான் எனது கடைசி படமாக இருக்கும்” என்றார். இதைக் கேட்ட அவரது ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags: