இது புதுசா இருக்கே..!! கட்டிப்பிடி வைத்தியத்திற்கு ஒரு மணிநேரத்திற்கு ரூ.7,000..!!
இது புதுசா இருக்கே..!! கட்டிப்பிடி வைத்தியத்திற்கு ஒரு மணிநேரத்திற்கு ரூ.7,000..!!;
கனடா நாட்டை சேர்ந்த ட்ரவர் ஹூட்டன்(30) என்பவர் வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் வரும் "கட்டிப்பிடி வைத்தியத்தை", 'தொழில்முறை அரவணைப்பாளர்' என்ற பெயரில் தொழிலாகவே செய்து வருகிறார். இதற்காக அவர் ஒரு மணிநேரத்திற்கு ரூ.7,000 வரை வசூலித்து வருகிறார்.
யாரவது மன ரீதியாக தனிமையை உணர்ந்தாலோ அல்லது சொல்ல முடியாத கஷ்டத்தில் இருந்தாலோ அவர்களுக்கு ஆதரவாக சில வார்த்தைகளை கூறி கட்டிப்பிடித்து சமாதானப்படுத்வது தான் இவரது வேலை. இது குறித்து அவர் கூறுகையில், அரவணைப்பதில் நிபுணத்துவம் பெற்ற தான், அதையே தனக்கு வருமானம் தரும் பணியாக மாற்றியுள்ளேன். இப்படி பட்ட இந்த வைத்தியம், என்னிடம் கஷ்டம் என்று வருபவர்களுக்கு சிறந்த மருந்தாக அமைகிறது.
இது போன்ற வேலையை பலரும் பாலியல் ரீதியாக தொடர்பு படுத்தி தவறான புரிதல் கொண்டிருக்கின்றனர். மனிதர்கள் தங்களை அன்பாக தொட்டு அரவணைக்க ஒரு ஆள் தேவை என்று தான் எண்ணுவார்கள். இந்த தெரபிக்கு முன்னதாக Non Sexual தெரபியின்போது அவர்கள் எப்படி உணர்கிறார்கள், என்ன விரும்புகிறார்கள் என்பதைக் கேட்டறிந்து அதன்படி தான் நடப்பேன்.
அவர்கள் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் உணர என்ன தேவை என்று பார்த்து பார்த்து செய்வேன்" என்றார்.