விஜய் படத்தின் ஹீரோயின் இவர்தான்! ரசிகர்கள் உற்சாகம்!!

விஜய் படத்தின் ஹீரோயின் இவர்தான்! ரசிகர்கள் உற்சாகம்!!

Update: 2022-04-06 06:45 GMT

விஜய்யின் அடுத்தப்படமான தளபதி 66-ல் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்பீஸ்ட் படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் நடிக்க உள்ளார். தற்காலிகமாக 'தளபதி 66' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிப்பார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடையே பலமாக எழுந்தது.

அதில் ராஷ்மிகாவின் பெயர் முன்னிலையில் இருந்தது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில் நேற்று ராஷ்மிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிப்பதை அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்தனர்.


அதோடு இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். விஜய் படத்திற்கு ரஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

newstm.in

Similar News