எங்களை உயிருடன் பார்ப்பது இதுவே கடைசி.. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உருக்கம் !!

எங்களை உயிருடன் பார்ப்பது இதுவே கடைசி.. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உருக்கம் !!

Update: 2022-03-07 08:30 GMT

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நேற்றிரவு தாக்குதலை தீவிரப்படுத்தினர். பல்வேறு நகரங்களில் குண்டுமழை பொழிந்தன. இதனால் உக்ரைன் முழுமையாக உருக்குலைந்து வருகிறது. ரஷ்யா தனது தாக்குதலை குறைத்துக்கொள்ள தொடர்ந்து மறுத்து வருகிறது. ஒருபக்கம் தாக்குதல் தீவிரமான நிலையில், இன்று உக்ரைன்- ரஷ்யா இடையே மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

இந்த நிலையில், உக்ரைன் வான் பரப்பை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதி என அறிவிக்க வேண்டுமென உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேட்டோ மற்றும் அமெரிக்காவிடம் தொடர்ந்து வலியுறுத்துகிறார். இவ்வாறு அறிவிப்பதன் மூலம், உக்ரைன் மீது பறக்கும் ரஷ்ய போர் விமானங்களை நேட்டோ படையும், அமெரிக்க படைகளும் சுட்டு வீழ்த்த முடியும். இதுவே உக்ரைன் அதிபரின் தொடர் கோரிக்கைக்கு காரணமாக உள்ளது.

ஆனால், நோட்டோ அமைப்பும், அமெரிக்காவும் இதில் மவுனம் காத்து வருகிறது. உக்ரைன் வான்பரப்பை தடை செய்வதாக அறிவித்து, ரஷ்ய போர் விமானங்களை தாக்கினால், இது ரஷ்யாவுக்கு எதிராக நேரடி போரில் களமிறங்குவது போலாகும் என்பதால் நேட்டோவும், அமெரிக்காவும் தயங்குகின்றன.

ஆனால், விரக்தி அடைந்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனிப்பட்ட முறையில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வீடியோ ஒன்றை அனுப்பினார். அதில் ஜெலன்ஸ்கி, ‘இதுவே நீங்கள் என்னை உயிருடன் பார்க்கும் கடைசி தருணமாகக் கூட இருக்கலாம். உக்ரைன் வான் பரப்பை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பதன் மூலமும், எங்களுக்கு அதிக போர் விமானங்களை வழங்குவதன் மூலமும் உக்ரைன் தன்னை தற்காத்துக் கொள்ள முடியும். அதற்கு உதவ வேண்டும், என்றார்.

ஐரோப்பிய நட்பு நாடுகள் உக்ரைனுக்கு மிக் ரக விமானங்களை வழங்க தயாராக உள்ளன. ஆனால் அந்த விமானங்களுக்கு மாற்றாக அமெரிக்காவின் எப்-16 ரக போர் விமானங்கள் விநியோகத்தை ஐரோப்பிய நாடுகள் எதிர்பார்த்துள்ளன. இதனை விநியோகிக்காமல் அமெரிக்கா தொடர்ந்து தாமதித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

Tags:    

Similar News