என்னை உயிருடன் பார்ப்பது இதுவே கடைசி.. போர்க்களத்துக்கு சென்ற உக்ரைன் அதிபர் உருக்கம் !!
என்னை உயிருடன் பார்ப்பது இதுவே கடைசி.. போர்க்களத்துக்கு சென்ற உக்ரைன் அதிபர் உருக்கம் !!
உக்ரைன் மீது பிப்ரவரி 24 ஆம் தேதி ரஷ்யா ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. முதல் நாளிலேயே வான்வழிக் கட்டமைப்பை கையகப்படுத்தியது. இரண்டாவது நாளான நேற்று உக்ரைனுக்குள் தரை வழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தியது. செர்னோபில் அணு உலையைக் கட்டுக்குள் கொண்டுவந்தது. துறைமுக நகரங்களை சுற்றிவளைத்து உக்ரைனுக்கு கடல்வழியாக உதவிகள் கிடைக்காமல் முடக்கியது.
நேற்று மாலை கீவ் நகரிலிருந்து மூன்று மைல் தலைவில் முகாமிட்ட ரஷ்யப் படைகள் அரசுப் பணியாளர்கள் குடியிருப்பைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளன. மேலும் உக்ரைனில் ராணுவம் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
இந்தச் சூழலில் தான் உக்ரைன் அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கி கீவ் நகரில் உள்ள அதிபர் குடியிருப்பு வளாகப் பகுதியில் தானே எடுத்த செல்ஃபி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உக்ரைன் வாழ்க என உரக்கக் கூறி சுதந்திரத்தைப் பேணுவோம்" என்று உறுதியளித்துள்ளார்.
ஐரோப்பிய யூனியன் தலைவர்களுடன் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி காணொலி காட்சி மூலம் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பேசிய ஜெலன்ஸ்கி, நீங்கள் என்னை உயிரோடு பார்ப்பது இது தான் கடைசி முறையாக இருக்கும்’ என்றார். மேலும் அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கி, ராணுவ உடை அணிந்து போர்க்களத்துக்கு நேரடியாக சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
newstm.in