பாஜகவுடன் அதிமுக இணைந்து செயல்படுவதற்கு இதுதான் காரணம்.. சசிகலா பேட்டி !!
பாஜகவுடன் அதிமுக இணைந்து செயல்படுவதற்கு இதுதான் காரணம்.. சசிகலா பேட்டி !!
சசிகலா ஆன்மீக பயணம் என தமிழகம் முழுவதும் சுற்றிவருகிறார். அந்த வகையில் தற்போது கொங்கு மண்டலத்துக்கு விசிட் அடித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை கோவிலுக்கு சசிகலா சாமி கும்பிட சென்றார். அப்போது, சங்ககிரியில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக பொதுச்செயலாளர் பதவியை யாரோ நாலு பேர் முடிவு செய்ய முடியாது. கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் தான் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கவும் நீக்கவோ முடியும். இது எம்ஜிஆர் வகுத்துத் தந்த திட்டம் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், பாஜக தமிழ்நாட்டில் வளர நினைப்பதில் தவறில்லை. ஒரு புதுக் கட்சி தொடங்கினால் அவர்கள் வளர தான் நினைப்பார்கள். பாஜகவுடன் அதிமுக இணைந்து செயல்படுவது கால சூழ்நிலை.
எம்ஜிஆர் காலத்தில் இருந்தே கொங்குமண்டலம் அதிமுகவின் கோட்டை தான். அதுதான் வழிவழியாக தொடர்ந்து வந்து கொண்டுள்ளது. ஓபிஎஸ் - இபிஎஸ்வுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளதா என்பதை கொஞ்சம் பொறுத்திருந்து பார்த்தால் அனைத்திற்கும் விடை கிடைக்கும். அனைத்தும் சரியாகும்.
மிக விரைவில் நிச்சயம் மாற்றம் ஏற்படும். வரப்போகின்ற நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே மாற்றத்தை நிச்சயம் பார்க்கலாம், என்று கூறினார். இதைத்தொடர்ந்து ஆன்மீக பயணம் அரசியல் பயணமாக மாறுமா என்ற கேள்விக்கு, ஆம் இனிமேல் அதை தான் செய்ய உள்ளேன் என தெரிவித்தார் சசிகலா.
newstm.in