ஒரு வார்டன் செய்யுற வேலையா இது..!! 10-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை..!!
ஒரு வார்டன் செய்யுற வேலையா இது..!! 10-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை..!!
ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவர் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மாவட்ட நூலகம் அருகில் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அவரது தந்தை பள்ளிக்கு வந்து மகனை வீட்டுக்கு அழைத்து சென்றாக தெரிகிறது.
இருப்பினும் மாணவர் பார்க்க பயத்துடனே காணப்பட்டு வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, பெற்றோர் மாணவரிடம் விசாரித்தபோது பள்ளியில் உள்ள விடுதி வார்டன் ராஜ்குமார், இதே பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மற்றொரு மாணவர் ஆகிய இருவரும் சேர்ந்து விடுதியில் வைத்து அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரிகிறது.
இதைக் கேட்டு மாணவரின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதில் 10-ம் வகுப்பு மாணவருக்கு உதடு, கை விரல்கள், மார்பு ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவர் பரமக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இதுதொடர்பாக மாணவனின் பெற்றோர்கள் நெல்லை மாநகர காவல் துறையிடம் ஆன்லைன் மூலம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் பாளையங்கோட்டை போலீசார் இதுதொடர்பாக பரமக்குடி சென்று பாதிக்கப்பட்ட மாணவனிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அதன்பேரில், தற்போது போலீசார் மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விடுதி வார்டன் ராஜ்குமார் மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் சக மாணவன் ஆகியோர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், விடுதி வார்டன் ராஜ்குமார் கைது நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவாகியுள்ளார்.