இதற்காகத்தான் முதல்வர் துபாய் சென்றுள்ளார்.. பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு..!
இதற்காகத்தான் முதல்வர் துபாய் சென்றுள்ளார்.. பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு..!
தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் மக்களை ஏமாற்றும் பட்ஜெட் எனக் கூறி, தமிழக பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில், 500-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
அப்போது மேடையில் பேசிய அண்ணாமலை கூறுகையில், “ஓட்டை பானையை வைத்து கொண்டு திமுக மாடலாக நினைக்கிறார்கள். தமிழகத்தில் மொத்த தேர்தல் வாக்குறுதி குறித்து தினமும் பொய் சொல்கிறார்கள்.
கல்வி பட்ஜெட்டில் ஆசிரியர்களுக்கு சம்பளம் மட்டும் 84% கொடுக்கப்படுகிறது. மீதி 16% திமுககாரர்களுக்கு கமிஷனாக போகப் போகிறது. இல்லம் தேடி கல்விக்கான நிதியை மத்திய அரசு தான் கொடுக்கிறது.
மதுரவாயல் இரண்டடுக்கு பாலத்தை திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது எதிர்த்தது. ஆனால் தற்போது 5000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் இது தமிழக பட்ஜெட் இல்லை, கோபாலபுரம் பட்ஜெட்.
அமைச்சர்கள் பி.டி.ஆர், ஏ.வ.வேலு, துரைமுருகன், செந்தில் பாலாஜி ஆகியோர் துறைகளுக்கு அதிகமாக பட்ஜெட் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டின் நோக்கம் அமைச்சர்களை திருப்திபடுத்துவதுதான்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது துபாய் சென்றிருப்பது தன்னுடைய குடும்பத்தை வளர்க்கவும், குடும்ப நிதியை பெருக்கவும்தான்” எனக் கூறினார்.