அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வீடு உட்பட அவருக்கு தொடர்புடைய 49 இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடுகளில் சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அதிமுகவை அரசியல் ரீதியாக, நேரடியாக எதிர்கொள்ள முடியாத விடியா திமுக அரசு, முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதும், அவருடைய நண்பர்கள், உறவினர்கள் மீதும் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது.

அரசியல் பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டு, மக்கள் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.