தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்!!
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்!!
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள 5 யூனிட்டுகளில் நாள்தோறும் ஆயிரத்து 50 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இங்கு ஒரு நாளுக்கு 5 பிரிவுகளில் மின் உற்பத்தி செய்ய 25 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படும்.
இந்நிலையில் தற்போது கோடை காலம் என்பதாலும், நிலக்கரியின் கையிருப்பில் தட்டுப்பாடு நிலவுவதாலும் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மின்சார உற்பத்தி தடைபட்டுள்ளது.இந்த நிலையில், 5 பிரிவுகளிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆயிரத்து 50 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கியது.விசாகப்பட்டினத்தில் இருந்து கப்பல் மூலம் நிலக்கரி கொண்டு வரப்பட்டதை அடுத்து, மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தற்போது 1 லட்சம் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளது.