மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் ஆன்மீகவாதிகள் அல்ல, ஆன்மிக வியாதிகள் என என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

திருவண்ணாமலையில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை, மாற்றுத்திறனாளித்துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட 30 துறைகளை சேர்ந்த 1 லட்சத்து 71 ஆயிரத்து 169 பயனாளிகளுக்கு 693 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

அதே போல் ஊரக வளர்ச்சி துறை, கூட்டுறவு துறை, வருவாய் துறை, நகராட்சி துறை பள்ளிக்கல்வித்துறை என 14 துறைகளில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டு உள்ள 70 கோடி மதிப்பீட்டில் உள்ள பல்வேறு கட்டிடங்களையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

9 துறைகளைச் சார்ந்த  340 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு திட்டப் பணிகளுக்கு 340 கோடி மதிப்பீட்டில் அவர் அடிக்கல் நாட்டினார். இதை தொடர்ந்து மேடையில் உரையாற்றிய மு..ஸ்டாலின்தொல்பொருள் துறையிடம் இருந்து அண்ணாமலையார் கோவிலில் மீட்டது கருணாநிதி  அரசு என்றும் பெருமிதமாக குறிப்பிட்டார்.

மதத்தை வைத்து அரசியல் நடத்தும் கண்களுக்கு தமிழக அரசின் திட்டங்கள் கண்களுக்கு தெரியாதுஅவர்கள் ஆன்மீகவாதிகள் அல்ல ஆன்மீக வியாதிகள் என்றும் விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய மு..ஸ்டாலின்தமிழகத்தில் ஓராண்டு திராவிட மாடல் ஆட்சியில் 13 திருக்கோவிலுக்கு குடைமுழுக்கு நடைபெற்றுள்ளது. 693 கோவில்களுக்கு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன

கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்டவர்களை ஒருங்கிணைத்து குழு அமைத்து அதனை முறைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு ஆவணம் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.

அனைத்து துறையும் சமம் என்று நடத்தும் ஆட்சி தான் திராவிட மாடல் ஆட்சி என்றும் கூறியவர் பிற்போக்குத்தனம் மற்றும் பொய் பேசுபவர்களுக்கு இது பற்றி புரிந்து கொள்ள முடியாது என்றும் தாங்கள் ஆன்மீகவாதிகளுக்கு எதிரி அல்ல என்றும் ஆன்மிகம் பெயரில் சலசலப்பை ஏற்படுத்துபவர்களுக்குத்தான் எதிரி என்றும் விமர்சனம் செய்தார்.

புதிய முயற்சி புதிய திட்டங்கள் இதைப் பற்றி சிந்தித்து கொண்டு இருப்பது தான் திராவிட மாடல் ஆட்சி என்றும் வீணர்களைப் பற்றி தான் கவலைப்படவில்லை டோன்ட் கேர் என்றும் மக்களாகிய நீங்களும் டோன்ட் கேர் ( I Dont Care)என்று சொல்லி நகருங்கள் இலக்கை அடைவோம் என்று கூறினார்.

newstm.in