நூலிழையில் விபத்தில் இருந்து தப்பிய விமானம் - சிலிர்க்கவைக்கும் வீடியோ !!

நூலிழையில் விபத்தில் இருந்து தப்பிய விமானம் - சிலிர்க்கவைக்கும் வீடியோ !!

Update: 2022-02-03 14:33 GMT

விமானம் ஒன்று தரையிறங்கும் நேரத்தில் மிகப்பெரிய ஆபத்திலிருந்து தப்பிய சிலிர்க்கவைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்று பலத்த காற்று காரணமாக தடுமாறிய நிலையில், தரையிறங்க முடியாமல் விமானியின் திறமையினால் மீண்டும் டேக்-ஆஃப் செய்யப்பட்டது.

விமானத்தை சரியாக தரை இறக்க முடியாததால் விமானி சாமர்த்தியமாக விமானத்தை அப்படியே மீண்டும் டேக் ஆப் செய்தார். இதில் விமானத்தின் பின்பகுதி லேசாக ரன்வேயில் உரசியதால் புகை எழுந்தது. இதனை தொடர்ந்து இரண்டாவது முயற்சியில் விமானி வெற்றிகரமாக விமானத்தை தரை இறக்கினார்.

இதன் மூலம் மிகப்பெரிய விபத்திலிருந்து அந்த விமானமும், அதிலிருந்த பயணிகளும் தப்பினர். கடந்த திங்கள்கிழமை காலை 10:50 மணியளவில் ஜெட் அபெர்டீனில் இருந்து வந்தடைந்த அந்த விமானம், Corrie புயலால் ஏற்பட்ட பலத்த காற்றால் தாக்கப்பட்டதால் திட்டமிடப்பட்ட தரையிறக்கத்தை பைலட் கைவிட்டதாக கூறப்பட்டது.

இந்த சம்பவத்தின் மெய் சிலிர்க்கவைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அதில், விமானத்தின் இறக்கை ஒருபக்கமாக சாயவிருந்த நிலையில், மீண்டும் டேக்-ஆஃப் செய்யப்பட்டது, அப்போது வால் பகுதி ஓடுபாதையில் தரைத்தட்டும் அளவிற்கு கீழே சென்றது. நல்லவேளையாக எந் அசம்பாவிதமும் நடக்கவில்லை. பின்னர், இரண்டாவது முயற்சியில் விமானம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.



 
newstm.in

Similar News