மெட்ரோவில் டிக்கெட்.. மின்சார ரயிலில் பயணம்.. வருகிறது புதிய சேவை..!

மெட்ரோவில் டிக்கெட்.. மின்சார ரயிலில் பயணம்.. வருகிறது புதிய சேவை..!

Update: 2022-03-19 18:18 GMT

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் புறநகர் மின்சார ரயில்களுக்கான டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மெட்ரோ ரயிலில் பயணிப்போரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.

இதற்கு முக்கிய காரணமாக திகழ்வது மெட்ரோ ரயில் பயணிகள் தாங்கள் இறங்கும் இடத்திலிருந்து அவர்கள் சென்று வருவதற்கான வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது 16 மெட்ரோ ரயில் நிலையங்களில் ரேபிடோ பைக், உபர் ஆட்டோ மற்றும் டாக்ஸி, ஸ்மார்ட் பைக் வசதிகள் உள்ளன. 12 மெட்ரோ ரயில் நிலையங்களில் இணைப்பு பேருந்துகள், 5 மெட்ரோ ரயில் நிலையங்களில் பேட்டரி கார் வசதிகள் உள்ளன.

அத்துடன், சென்னை எழும்பூர், சென்ட்ரல் மற்றும் கிண்டி ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் புறநகர் மின்சார ரயில்களுக்கான டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த வசதி விரைவில் நடைமுறைக்கு வரும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News