நாளை முதல் ஆன்லைனில் டிக்கெட்.. பபாசி செயலாளர் அறிவிப்பு..!
நாளை முதல் ஆன்லைனில் டிக்கெட்.. பபாசி செயலாளர் அறிவிப்பு..!
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் 16-ம் தேதி முதல் புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சிக்கு அனுமதி கட்டணமாக 10 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 500 பதிப்பாளர்கள் உடன் 800 அரங்கங்களில் நடக்கும் புத்தக கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இந்நிலையில், புத்தகக் கண்காட்சிக்கான செய்தியாளர் சந்திப்பு நந்தனத்தில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பபாசி செயலாளர் முருகன், "தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 45-வது சென்னை புத்தகக் கண்காட்சி பிப்.16 முதல் மார்ச் 6-ம் தேதி வரை 19 நாட்கள் நடைபெறுகிறது.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயனடையும் வகையில் 10 லட்சம் இலவச அனுமதி சீட்டுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. புத்தகக் கண்காட்சியில் புத்தகம் வாங்கி வாசித்து, அந்த புத்தகம் பற்றி 2 நிமிடம் சிறப்பாக பேசும் மாணவர் ஒருவருக்கும் பரிசு வழங்கப்படும்.
காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறும். நாளை (6-ம் தேதி) முதல் bapasi. Com எனும் பபாசி இணையதளத்தில் ஆன்லைன் முறையில் புத்தகக் கண்காட்சிக்கான டிக்கெட்டை பெறலாம்” என்றும் தெரிவித்துள்ளார்.