கழிவறைக்குள் கட்டுவிரியன்.. அலறியடித்து ஓடிய மாணவர்கள்.. லாவகமாக பிடித்த ஆசிரியர்..!
கழிவறைக்குள் கட்டுவிரியன்.. அலறியடித்து ஓடிய மாணவர்கள்.. லாவகமாக பிடித்த ஆசிரியர்..!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருவிகுளம் கோபால் நாயக்கர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், மாணவர்கள் பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறைக்கு சென்றபோது, தண்ணீர் குழாய் பகுதியில் கட்டுவிரியன் பாம்பு ஒன்று இருந்துள்ளது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து ஓடிய மாணவர்கள், இதுகுறித்து உடற்கல்வி ஆசிரியர் நேருதாஸ் கென்னடியிடம் தெரிவித்தனர்.
கழிவறைக்குள் சென்ற அவர், குச்சியின் உதவியுடன் பாம்பை வெளியே வர வைத்து லாவகமாக மீட்டு காட்டுப்பகுதிக்குள் கொண்டு விட்டார்.
இதேபோல கடந்த 10 தினங்களுக்கு முன்பு பள்ளிக்குள் புகுந்த 6 அடி நீளமுள்ள சாரை பாம்பை பிடித்து, அதையும் காட்டுப்பகுதிக்குள் கொண்டு விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளி வளாகத்திற்குள் பாம்பு புகுந்த நிலையில், யாரையும் எதிர்பார்க்காமல் உடற்கல்வி ஆசிரியர் இது போன்ற பணிகளில் ஈடுபட்டது சக ஆசிரியர்கள் மற்றும் மாணவ - மாணவிகள் மத்தியில் வரவேற்பை பெற்றதுடன் உடற்கல்வி ஆசிரியருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.