டிக்டாக் பிரபலத்துக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை!!

டிக்டாக் பிரபலத்துக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை!!

Update: 2022-07-21 18:33 GMT

பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் வந்த அமெரிக்க டிக்டாக் பிரபலம் கூட்டு பாலியல் ன்கொடுமைக்கு  ஆளாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 21 வயதான அந்த பெண் கடந்த ஒரு மாதமாக பாகிஸ்தானில் உள்ளார். இவர் சுற்றுப் பயணம் செய்து வீடியோ எடுத்து பேஸ்புக், டிக்டாக் போன்ற சமூக வலைத்தளங்களில் பதவிட்டுவருகிறார்.

இந்நிலையில், பெண்ணிடம் பாகிஸ்தானைச் சேர்ந்த முசாமில் சிப்ரா, அசான் கோசா ஆகிய இருவர் சமூக வலைத்தளம் மூலம் ஏற்கனவே நட்பாகினர். இந்த பெண்ணை கராச்சியில் உள்ள முன்ரோ கோட்டைக்கு வருமாறு அழைத்தனர்.

ஜூலை 17ஆம் தேதி அந்த பெண் கராச்சிக்கு சென்று இரு நண்பர்களையும் சந்தித்தார். மூவரும் முன்ரோ கோட்டை அருகே உள்ள ஹோட்டலில் தங்கிய நிலையில், அந்த கோட்டையை சுற்றிப் பார்த்து தனது vlog கண்டென்டுக்கு வீடியோ எடுத்துள்ளார்.

பின்னர், மூவரும் ஹோட்டலுக்கு திரும்பினர். அன்றைய இரவு அந்த பெண்ணை ஹோட்டலில் நண்பர்கள் இருவரும் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து, அதை வீடியோ எடுத்தனர். விஷயத்தை வெளியே சொன்னால் வீடியோவை வெளியிட்டு விடுவோம் என மிரட்டியுள்ளனர்.

ஆனால், பாதிக்கப்பட்ட பெண் தைரியமாக தனக்கு நேர்ந்த அவலத்தை பஞ்சாப் மாகாண காவல்துறையிடம் புகாராக அளித்தார். புகாரை ஏற்று எப்ஐஆர் பதிந்த காவல்துறை, விரைந்து நடவடிக்கை எடுத்து இருவரையும் கைது செய்தது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக மாகாண காவல்துறை தலைவர் விரிவான அறிக்கை தர வேண்டும் என பஞ்சாப் மாகாண முதலமைச்சர் ஹம்சா ஷெபாஸ் உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Similar News