விஐபி தரிசனம் திடீரென ரத்து செய்த திருப்பதி தேவஸ்தானம்..!!

விஐபி தரிசனம் திடீரென ரத்து செய்த திருப்பதி தேவஸ்தானம்..!!

Update: 2022-05-15 04:45 GMT

உலகப்புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இன்று முதல் ஜுலை 15ஆம் தேதி வரை விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டு முழுவதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படும்.தற்போது கோடை விடுமுறை என்பதால் வழக்கத்தை விட கூடுதலான பக்தர்கள் திருப்பதிக்கு செல்கின்றனர்.

பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் ஜுலை 15ஆம் தேதி வரை விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அஷ்டதள பாத பத்மாராதனை, திருப்பாவாடை சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Similar News