இந்திய மக்கள் அனைவரும் தங்களது ஆதார் கார்டுடன் பான் கார்டை கட்டாயம் இணைக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

இதற்காக பலமுறை கொடுக்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்த நிலையில், அபராதக் கட்டணத்தை இருமடங்காக உயர்த்துவதாக அரசு அறிவித்துள்ளது.

தற்போது அரசு விதித்துள்ள ரூபாய் ஆயிரம் அபராத கட்டணத்தை செலுத்தி உங்கள் ஆதார் - பான் கார்டை வரும் 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதிக்குள் இணைக்காவிட்டால் பான் கார்டு செயல் இழக்க நேரிடலாம்.

அத்துடன், வருமான வரிச் சட்டம் 1961-ன் கீழ் அனைத்து விளைவுகளையும் சந்திக்க நேரிடும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆதார் - பான் இணைப்புக்கு அரசு விதித்துள்ள அபாரத் தொகையை எப்படி செலுத்த வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

முதலில், https://onlineservices.tin.egov-nsdl.com/etaxnew/tdsnontds.jsp என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேணடும். ஆதார் கார்டு - பான் இணைப்பு கோரிக்கையை சமர்ப்பிக்க சலான் எண் ITNS 280-ன் கீழ் தொடர்வதும் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

இதையடுத்து, பொருந்தக்கூடிய வரியை (tax applicable) தேர்ந்தெடுக்கவும். பின்னர் மைனர் ஹெட் 500 மற்றும் மேஜர் ஹெட் 0021 ஆகியவற்றின் கீழ் ஒரே சலானில் கட்டணம் செலுத்துவதை உறுதி செய்யவும்.

எதன் மூலம் பணம் செலுத்துகிறீர்கள்..? அதாவது நெட் பேங்கிங் அல்லது டெபிட் கார்டு மூலம் என்பதை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.

இதைத் தொடர்ந்து, பான் எண்ணை உள்ளிட்டு மதிப்பீட்டு ஆண்டை தேர்ந்தெடுத்து முகவரியை பதிவு செய்துவிட்டு, இறுதியில் சரியாக கேப்சாவை உள்ளிட்டு தொடரு என்பதை கிளிக் செய்ய வேண்டும்.இப்போது உங்கள் அபராதத் தொகையை நீங்கள் எளிய முறையில் ஆன்லைன் மூலம் செலுத்திக் கொள்ளலாம்.