இன்று +1 தேர்வு முடிவுகள்... தெரிந்து கொள்வது எப்படி?

இன்று +1 தேர்வு முடிவுகள்... தெரிந்து கொள்வது எப்படி?

Update: 2022-06-27 06:00 GMT

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2021-22 ஆம் கல்வியாண்டுக்கான 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடத்தப்பட்டது. 8 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதினர்.

அதனைத்தொடர்ந்து வினாத்தாள்களை திருத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தற்போது அப்பணிகள் முடிந்துள்ளதால், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை இன்று தேர்வுத்துறை வெளியிட உள்ளது.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் வெளியிடப்பட உள்ளது.

தேர்வர்கள் இந்த இணையதளங்களில் தங்களுடைய பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைன் விண்ணப்பப்பதிவில் குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

அண்மையில் தான் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

newstm.in

Similar News