இன்று 10, +2 தேர்வு முடிவுகள் வெளியீடு... இந்த வெப்சைட்டில் பாருங்கள்!!
இன்று 10, +2 தேர்வு முடிவுகள் வெளியீடு... இந்த வெப்சைட்டில் பாருங்கள்!!
10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்கம் இன்று வெளியிடுகிறது.
இன்று (ஜூன்20 ) காலை 9.30 மணிக்கு சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும். அடுத்த நிமிடமே மாவட்டந்தோறும் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
http://www.tnresults.nic.in/, http://www.dge1.tn.nic.in/, http://www.dge2.tn.nic.in/, https://www.dge.tn.gov.in/ ஆகிய இணைய தளங்கள் வாயிலாக மாணவர்கள் சிரமமின்றி தேர்வு முடிவுகளை காணலாம்.
அதேபோன்று, இன்று நண்பகல் 12 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும். பள்ளி மாணவர்கள் உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
தனித்தேர்வர்களுக்கும் ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், அரசுத் தேர்வுகள் இயக்கத்தின் இணையதளமான https://www.dge.tn.gov.in/ வாயிலாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in