இன்று சர்வதேச தாய்மொழி தினம்! அப்படி என்றால் என்ன?
இன்று சர்வதேச தாய்மொழி தினம்! அப்படி என்றால் என்ன?
வங்கதேச தலைநகர் டாக்காவில் கடந்த 1952ஆம் ஆண்டு மொழிக்காக நடந்த போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக ஆண்டுதோறும் பிப்ரவரி 21ஆம் தேதியை உலக தாய்மொழி தினமாக கடைபிடிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை ரஃபீக்குல் இஸ்லாம் எனும் வங்கதேச அறிஞர் ஜனவரி 1998இல் முன்மொழிந்தார்.
அவரது கோரிக்கையை பரிசீலித்த யுனெஸ்கோ அமைப்பு 1999ஆம் ஆண்டு அந்த தீர்மானத்தை அங்கீகரித்தது. இதையடுத்து கடந்த 2000 வாக்கிலிருந்து உலக தாய்மொழிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும் பேசப்பட்டு வரும் மொழிகளுக்காக ஆண்டுதோறும் சர்வதேச தாய்மொழி தினம் ‘பிப்ரவரி 21’-ஆம் தேதி அன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு ‘பன்மொழி கற்றலுக்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்: அது சார்ந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகள்’ என்ற கருப்பொருளை யுனெஸ்கோ அமைப்பு முன்னெடுத்துள்ளது.
newstm.in