இன்று இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!!

இன்று இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!!

Update: 2022-03-08 05:00 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மிகவும் பிரசத்தி பெற்றது. இக்கோவில் திருவிழா கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.பெண்கள் தலையில் இருமுடி கட்டை சுமந்து வந்து பொங்கலிட்டு அம்மனை வழிபட்டு செல்வதால் இது பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது.

இந்த நிலையில், இன்று மார்ச் 8ஆம் தேதி ( செவ்வாய்க்கிழமை ) மாசிக்கொடை திருவிழாவிற்காக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் அறிவித்துள்ளார்

அதனபடி  மார்ச் 8 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கன்னியாகுமரி  மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கப்படுகிறது. அரசின் முக்கிய பணிகளுக்காக  தலைமை கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்களில்  மட்டும்  தேவையான பணியாளர்களை கொண்டு இயங்கும் என்றும்,  இந்த விடுமுறையை ஈடுசெய்ய ஏப்ரல் 9ம் தேதி 2வது சனிக்கிழமை  பணி நாளாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்கனவே மார்ச் 4ம் தேதி சுவாமி தோப்பு அய்யா வைகுண்டர்  பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக பள்ளிகள், கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News