இன்று இந்த 2 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!
இன்று இந்த 2 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘பங்குனி உத்திர திருநாள் மார்ச் 18-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.இதையொட்டி, தென்காசி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளதால், அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என்று அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
மேற்குறிப்பிட்ட நாளில் அரசு பொதுத்தேர்வுகள் ஏதேனுமிருப்பின் சம்பத்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுத்தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது எனவும், மேலே குறிப்பிட்டுள்ள உள்ளூர் விடுமுறை ஈடுசெய்யும் வகையில் 26.03.2022 சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.