தமிழகத்தை உலுக்கிய துப்பாக்கி சூடு.. இன்று 4ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி

தமிழகத்தை உலுக்கிய துப்பாக்கி சூடு.. இன்று 4ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி

Update: 2022-05-22 09:19 GMT

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் நான்காம் ஆண்டு நினைவு தினம் இன்று (மே 22) அனுசரிக்கப்படுகிறது.

தமிழக வரலாற்றில் ஒரு மறக்க முடியாத, மறைக்க முடியாத பக்கமாக அமைந்துள்ளது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம். அதாவது,  தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

அந்த வகையில், கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு ஆலைக்கு எதிராக பிரமாண்ட பேரணி நடத்தினர். அமைதியான முறையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்து. வன்முறை மற்றும் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு நாட்டையே உலுக்கியது. பள்ளி மாணவி முதல் பெரியவர் வரை துப்பாக்கிச்சூட்டில் பலியாகினர்.. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்து இன்றோடு (மே 22) நான்கு ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில், போராட்டத்தின்போது துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

4ஆவது ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, உயிரிழந்தோரின் புகைப்படங்களுக்கு மலர்தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர். காவல் சட்டம் நடைமுறையில் உள்ளதால் வெளி மாவட்டத்தினர் கலந்து கொள்ள அனுமதியில்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் பல இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். 

newstm.in

Similar News