இன்று கடைசி டி20: கோலி, பந்த்துக்கு ஓய்வு.. ருதுராஜ்-க்கு வாய்ப்பு !!

இன்று கடைசி டி20: கோலி, பந்த்துக்கு ஓய்வு.. ருதுராஜ்-க்கு வாய்ப்பு !!

Update: 2022-02-20 09:45 GMT

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் மோதும் டி20 தொடரின் 3-ஆவது மற்றும் கடைசி ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

இந்தியா வந்துள்ள மேற்கிந்தியத் தீவுகள் ஒருநாள் போட்டித் தொடரை இழந்துவிட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஆனால், டி20 தொடரையும் 2க்கு 0 என பெற்றுவிட்ட இந்தியா முழுமையாக அதை வசப்படுத்தும் எதிா்பாா்ப்பில் இருக்கிறது. ஆனால், மேற்கிந்தியத் தீவுகளோ ஆறுதல் வெற்றி ஏக்கத்துடன் களம் காணவுள்ளது.

இந்த நிலையில், பயோ-பபுள் அழுத்தத்தை குறைக்கும் வகையில் விராட் கோலி, ரிஷப் பந்த் ஆகியோருக்கு இந்த கடைசி ஆட்டம், இலங்கைக்கு எதிரான டி20 தொடா் என 4 ஆட்டங்களில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

அதன்பேரில், ஷ்ரேயஸ் ஐயா், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு இந்த கடைசி ஆட்டத்தில் வாய்ப்பு கிடைக்க இருக்கிறது. இதில் கடந்த 2 ஆட்டங்களில் அவ்வளவாக சோபிக்காத இஷான் கிஷணுக்குப் பதிலாக ருதுராஜ் கெய்க்வாடுக்கும், கோலி இடத்தில் ஷ்ரேயஸ் ஐயருக்கும் இந்த ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கலாம். டி20 உலகக் கோப்பை எதிா்வரும் நிலையில், அணியில் இருக்கும் வீரா்களின் திறன் மற்றும் ஃபாா்மை எடைபோட இந்த ஆட்டம் உதவியாக இருக்கும்.

பௌலிங்கில் நல்ல ஃபாா்மில் இருக்கும் புவனேஷ்வா் குமாா், ஹா்ஷல் படேலுக்குப் பதிலாக முகமது சிராஜும், அறிமுக வீரரான அவேஷ் கானுக்கும் ரோஹித் வாய்ப்பு வழங்குவார் என கூறப்படுகிறது. இன்று இரவு 7 மணிக்கு கொல்கத்தா ஈடன் காா்டன் மைதானத்தில் போட்டி நடைபெறவுள்ளது.

 

newstm.in


 

Tags:    

Similar News