இன்றே கடைசி நாள்.. விண்ணப்பிக்க மறவாதீர்கள்..!

இன்றே கடைசி நாள்.. விண்ணப்பிக்க மறவாதீர்கள்..!

Update: 2022-04-13 10:32 GMT

தமிழகத்தில், ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு (teacher eligibility test 2022) தொடங்கும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

அத்துடன், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 14-03-2022 முதல் 13-04-2022 வரை, http://www.trb.tn.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க 500 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தாழ்த்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பழங்குடியினருக்கு தேர்வு கட்டணம் 250 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (13-ம் தேதி) கடைசி நாள் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, சர்வரில் ஏற்படும் கோளாறு காரணமாக விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்குமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News