மாணவர்களின் கவனத்திற்கு… இன்று கடைசி நாள்!!

மாணவர்களின் கவனத்திற்கு… இன்று கடைசி நாள்!!

Update: 2022-03-16 06:00 GMT

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள், அரசு தேர்வுத்துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

திருப்பூர் மாவட்டத்தில் நஞ்சப்பா நகரவை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஜெய்வாபாய் நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தாராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, தாராபுரம் என்.சி.பி.நகரவை மேல்நிலைப்பள்ளி, உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில், சேவை மையங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இன்று (16ஆம் தேதி) கடைசி தினம் என்பதால் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

தவறும் பட்சத்தில், மார்ச் 18 முதல் 21ஆம் தேதி வரை தட்கல் முறையில் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

newstm.in

Similar News