சொத்து வரி செலுத்த இன்றே கடைசி நாள்!!
சொத்து வரி செலுத்த இன்றே கடைசி நாள்!!
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்தவேண்டிய, சொத்து வரியை இன்றைக்குள் செலுத்துவோருக்கு 5% விலக்கு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியை பொருத்தவரையில், சீராய்வு குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், புதிய சொத்து வரி தொடர்பாக மன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பின்னர் அமல்படுத்தப்படும்.
அதன்படி, 2022-2023 ஆம் ஆண்டு முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை, ஏற்கனவே செலுத்தி வந்த கட்டணம் விகிதத்திலேயே செலுத்தலாம். இன்றைக்குள் சொத்துவரி செலுத்தவில்லை என்றால், மொத்தமுள்ள சொத்து வரியில் 2 சதவிகித அபராதத் தொகை விதிக்கப்பட்டு சொத்து வரியுடன் சேர்த்து வசூலிக்கப்படும்.
மண்டல அலுவலகங்கள் வார்டு அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்கள், பேடிஎம், நம்ம சென்னை செயலி, கிரெடிட் அல்லது டெபிட் கார்ட் வாயிலாகவும், மாநகராட்சி வரி வசூலிப்பார்கள், உரிம ஆய்வாளர்கள் மூலமாக சொத்துவரியை செலுத்தலாம்.
newstm.in