இன்று இந்த 14 மாவட்டங்களில் கனமழை கொட்டும்.. வானிலை மையம் எச்சரிக்கை !!

இன்று இந்த 14 மாவட்டங்களில் கனமழை கொட்டும்.. வானிலை மையம் எச்சரிக்கை !!

Update: 2022-06-04 07:00 GMT

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்தாலும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் கடும் வெப்பம் மற்றும் அனல்காற்றால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். அதேநேரத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆனந்தம் கொள்கின்றனர். 

குமரிக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்ட கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. மேலும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் தென்காசி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், சேலம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதைப்போன்று வரும் 5, 6, 7 தேதிகளில் தமிழ்நாடு, புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.  


newstm.in

Similar News