தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

Update: 2022-07-24 06:15 GMT

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் குரூப் 4 பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெறுவதால் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம் சார்பில், தேர்வு மையங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

தமிழக அரசில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 7,301 இடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு இன்று நடைபெறுகிறது.

இன்று காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை, கட்டாய தமிழ் மொழி தகுதி & மதிப்பீட்டுத் தேர்வு, பொது அறிவு, திறனறி பகுதி என்று மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.

இந்நிலையில், குரூப் 4 தேர்வு நடைபெறுவதையொட்டி தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு பேருந்துகளை தமிழ்நாடு போக்குவரத்துறை இயக்குகிறது. அந்தந்த மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தல்படி, மையங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

தேர்வு மையங்கள் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் இந்த சிறப்பு பேருந்துகள் முறையாக நின்று செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதை போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கண்காணிப்பர் எனவும் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

newstm.in

Similar News