சாமானிய மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த இன்றைய தங்கம் விலை..!!

சாமானிய மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த இன்றைய தங்கம் விலை..!!;

Update: 2022-04-09 14:12 GMT

இந்தியர்கள் எப்பொழுதுமே தங்கத்தில் முதலீடு செய்வதில் வல்லவர்கள். வேலையின்மை, உடல்நல பிரச்சனை, குடும்பத்தில் சுப நிகழ்வுகள் என்று திடீரென்று பணம் தேவைப்படும் நேரங்களில் நம் கைவசமுள்ள நகைகள் நமக்கு எப்பொழுதுமே ஆபத்பாந்தவனாக உதவுவதே இதற்கு காரணம். இந்திய குடும்பங்களில் பொதுவாக பெண்களே வீட்டு வரவு செலவு கணக்குகளை பார்ப்பார்கள். அப்படி பார்க்கும் பொழுது சேமிக்கும் பழக்கமும் பெரும்பாலான பெண்களிடத்தில் இருக்கும். அப்படி சேமிக்கும் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து சிறு நகைகளாக வாங்கி சேர்ப்பவர்கள் பலருண்டு.

தங்கம் சேமிப்பவருக்கும் தங்க நகை வாங்க நினைவப்பருக்கும் வீட்டில் விசேஷம் வைத்திருப்பவருக்கும் இந்த தங்க விலை உயர்வு பெரும் சுமையாக மாறியுள்ளது என கூறலாம் 

இந்நிலையில், தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு 264 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 39,352 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.83 உயர்ந்து ஒரு கிராம் விலை 4,919 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளி 71.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 71,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

Similar News