தக்காளி காய்ச்சல் - புதிய வைரஸ் பரவல்..!!

தக்காளி காய்ச்சல் - புதிய வைரஸ் பரவல்..!!

Update: 2022-05-08 10:10 GMT

இந்தியாவில் ஜூன் மாதத்தில் இந்தியா முழுவதும் கொரோனா 4 வதுஅலை உச்சத்தில் இருக்கும் என கான்பூர் ஐஐடி விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதன் எதிரொலியாக தற்போது குறிப்பிட்ட சில மாநிலங்களில் கொரொனா மெல்ல பரவத் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் கொரோனா 3 வது அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு பல மாநிலங்களில் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. ஜூன் மாதத்தில் இந்தியா முழுவதும் கொரோனா 4 வதுஅலை உச்சத்தில் இருக்கும் என கான்பூர் ஐஐடி விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதன் எதிரொலியாக தற்போது குறிப்பிட்ட சில மாநிலங்களில் கொரொனா மெல்ல பரவத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக கேரளாவில் கடந்த சில நாட்களாகவே புதுவகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. காய்ச்சல், உடல் வலி, கை, கால்கள் வெள்ளை நிறமாக மாறுதல் உட்பட பல விபரீத அறிகுறிகளுடன் வருகிறது. அதிலும் 5 வயதுக்கு உட்பட்ட  குழந்தைகளே அதிகம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அவர்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் தக்காளி காய்ச்சல் எனப்படும் புதிய வகை வைரஸ் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் கேரளா முழுவதும் மிக  வேகமாக பரவி வருகிறது.

கொல்லம் மாவட்டத்தில் மட்டும்  இதுவரை 85 குழந்தைகள் அரசு மருத்துவமனைகளில் தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் இன்னும் கணக்கெடுப்பு செய்தால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News