தக்காளி விலை தொடர்ந்து அதிகரிப்பு.. இன்றைய விலை என்ன தெரியுமா..?
தக்காளி விலை தொடர்ந்து அதிகரிப்பு.. இன்றைய விலை என்ன தெரியுமா..?
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து குறைவால் தக்காளி விலை அதிகரித்துள்ளது. அதன்படி, நாட்டுத் தக்காளி ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், நவீன் தக்காளி 85 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிலோ 100 ரூபாய் முதல் 110 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வழக்கமாக 70 லாரிகள் வரும் நிலையில், தற்போது 40 லாரிகள் மட்டுமே வருகிறது.
அத்துடன், விவசாயிகள் தக்காளி சாகுபடியை அதிகம் மேற்கொள்ளாததால் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது’ என்று தெரிவித்தனர்.
அதேபோல அவரைக்காய், பீன்ஸ் விலையும் இரு மடங்கு உயர்ந்துள்ளது. உருளைக்கிழங்கு ரூ.30, சின்ன வெங்காயம் ரூ.43, ஊட்டி கேரட் ரூ.25, வெண்டைக்காய் ரூ.40, முருங்கைக்காய் ரூ.70, எலுமிச்சை 140 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.