மீண்டும் எகிறியது தக்காளி விலை. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்..!
மீண்டும் எகிறியது தக்காளி விலை. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்..!
சென்னை கோயம்பேடு மார்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து தினசரி தக்காளி விற்பனைக்கு வருகிறது. கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 8 ரூபாய்க்கும், சில்லறை விற்பனை கடைகளில் 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதனிடையே, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெய்த திடீர் மழை காரணமாக அந்த பகுதிகளில் நடைபெற்று வந்த தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, அங்குள்ள வியாபாரிகளும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் தக்காளியை கொள்முதல் செய்ய வந்ததால் கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறையத் தொடங்கியது.
இதனால், தக்காளி விலை அதிகரித்து வருகிறது. அதன்படி, கடந்த ஏப்ரல் இறுதியில் கோயம்பேட்டில் தக்காளி விலை கிலோ ரூ.50க்கு விற்பனையானது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்தது. இதனையடுத்து, சென்னை கோயம்பேட்டில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.70 ஆக அதிகரித்து உள்ளது. சில்லறை விற்பனை விலை ரூ.80 ஆக உயர்ந்து உள்ளது.
இதேபோன்று, திருச்சி காந்தி மார்க்கெட்டில் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், இல்லத்தரசிகள், உணவக உரிமையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.