நாளை காலை 10 மணிக்கு.. மறந்துடாதீங்க மக்களே..!
நாளை காலை 10 மணிக்கு.. மறந்துடாதீங்க மக்களே..!
சென்னையில் நாளை (22-ம் தேதி) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என வேலைவாய்ப்பு பயிற்சித் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் கொ.வீரராகவ ராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து நாளை (22-ம் தேதி) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளன.
இந்த வேலைவாய்ப்பு முகாம் கிண்டி தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அமைந்துள்ள தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும்.
இதில், 15-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளன. இந்த முகாமில், 8-ம் வகுப்பு, எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 முடித்தவர்கள், ஐடிஐ, பாலிடெக்னிக் படித்தவர்கள், கலை அறிவியல் உட்பட அனைத்து பட்டதாரிகளும் கலந்து கொள்ளலாம். வயது 30க்குள் இருக்க வேண்டும்.
இந்த அரிய வாய்ப்பை படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.