#BREAKING:- தோல் தொழிற்சாலையில் விஷவாயு கசிவு.. 3 பேர் மருத்துவமனையில் அனுமதி.. ஒருவர் கவலைக்கிடம்..!

#BREAKING:- தோல் தொழிற்சாலையில் விஷவாயு கசிவு.. 3 பேர் மருத்துவமனையில் அனுமதி.. ஒருவர் கவலைக்கிடம்..!

Update: 2022-06-17 10:53 GMT

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி சாலையில், ‘வாணி டெக்’ எனும் பெயரில் தோல் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த தொழிற்சாலையில் உள்ள தோல் கழிவு சுத்திகரிப்பு அறையில், 50 அடி ஆழத்தில் உள்ள கழிவு நீர் தரம் பிரித்து சுத்திகரிக்கும் குழாய் பழுதடைந்தது.

அதை சரி செய்வதற்காக தொழிற்சாலையில் மெக்கானிக்காக பணிபுரியும் நவீன் குமார், மணிகண்டன், ரவிக்குமார் மற்றும் சுதாகர் ஆகியோர் நேற்று மாலை 4 மணியளவில் இறங்கினர்.

அப்போது, குழாயில் இருந்து அதிக அளவு விஷவாயு வெளியானதால் நவீன்குமார் 50 அடி ஆழத்தில் மயக்கமடைந்தார். மணிகண்டன் மற்றும் ரவிகுமாருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.


உடனடியாக மூவரையும் மீட்ட சுதாகர், உடனிருந்த பணியாளர்களுடன் மூவரையும் வாணியம்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

அங்கு, மணிகண்டன் மற்றும் ரவிகுமாருக்கு சிகிச்சையளித்து வரும் நிலையில் நவீன் குமார் உடல்நிலை மிக மோசமாக உள்ளதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை, மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கிய சம்பவம் குறித்து வாணியம்பாடி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News