இன்று பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு..!!
இன்று பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு..!!
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில், தேசிய நெடுஞ்சாலை துறையின் புதிய திட்டங்கள், ரெயில்வே துறையின் புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க இன்று சென்னை வருகிறார் பிரதமர் மோடி..
பிரதமரின் வருகையையொட்டியும் விழா நடைபெறும் அதை சுற்றி உள்ள சாலைகளில் குறிப்பாக ஈ.வே.ரா சாலை, தாசபிரகாஷ் முதல் சென்னை மருத்துவ கல்லூரி சந்திப்பு வரை மாலை 3.30 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொதுவாக அண்ணாசாலை, எஸ்.வி.படேல் சாலை, ஜிஎஸ்டி சாலைகளில் போக்குவரத்து மெதுவாக இருக்கும்.
ஆகையால் வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை இந்த சாலையில் தவிர்த்து மாற்று வழியில் செல்ல திட்டமிடுமாறு கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி இன்று மாலை ஹைதராபாத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு மாலை 5.10 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார்.
பின்னர், அவர் ஹெலிகாப்டரில் புறப்பட்டு, ஐஎன்எஸ் அடையாறு வந்து, கார் மூலம் நேரு விளையாட்டு அரங்கம் வருகிறார். ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு 5.45 மணிக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி அங்கு இரவு 7 மணிவரை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அந்த நிகழ்ச்சியில் ரூ.31,400 கோடி மதிப்பீட்டிலான 11 மக்கள் நலத் திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார்.நிகழ்ச்சி முடிந்ததும் 7.05 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இருந்து புறப்பட்டு 7.35 மணிக்கு சென்னை விமான நிலையத்தை சென்றடைகிறார். பின்னர் அங்கிருந்து 7.40 மணிக்கு இந்திய விமானப் படை ஐ.ஏ.எப். பிபிஜே விமானத்தில் புறப்பட்டு டெல்லிக்கு இரவு 10.25 மணிக்கு செல்கிறார்.