சோகம்! காவிரி ஆற்றில் மூழ்கி 16 வயது மாணவி உயிரிழப்பு!!

சோகம்! காவிரி ஆற்றில் மூழ்கி 16 வயது மாணவி உயிரிழப்பு!!

Update: 2022-03-08 10:12 GMT

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி, திருப்பத்தூரை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏலகிரி மலை பகுதியை சேர்ந்த இளையராஜா என்பவரின் மகள் ஜனனி (16) திருப்பத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், இளையராஜா தனது உறவினரின் 16ஆவது நாள் காரியம் செய்வதற்காக குடும்பத்துடன் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு சென்றிருந்தார்.

தொடர்ந்து, ஒகேனக்கலில் பல்வேறு இடங்களுக்கு சென்றுவிட்டு, முதலைப் பண்ணை எதிரேயுள்ள காவிரி ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர்அப்போது, எதிர்பாராத விதமாக ஜனனி ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டார்.

நீச்சல் தெரியாத நிலையில்அவர் ஆற்றில் மூழ்கினார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், ஜனனியை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவரை மீட்க முடியவில்லை.

இதுகுறித்து தகவலின் பேரில் ஒகேனக்கல் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆற்றில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலான தேடுதலுக்கு பின்னர் ஜனனி உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

newstm.in

Similar News