சோகம்! மின்னல் தாக்கி தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழப்பு!!
சோகம்! மின்னல் தாக்கி தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழப்பு!!
விருதுநகர் மல்லி கிட்டங்கி ரோட்டை சேர்ந்த சதீஷ் என்பவர் எல்ஐசி ஏஜெண்ட்டாக பணிபுரிந்து வருகிறார். அவர் தற்போது கருப்பசாமி நகர் பகுதியில் வீடு கட்டி வருகிறார்.
சதீஷ் காரைக்குடிக்கு சென்றிருந்த நிலையில், வழக்கம்போல் வீட்டு வேலை நடந்து கொண்டிருந்தது. அப்போது இடி, மின்னலுடன் கனமழை பெய்ய துவங்கியது.
இதையடுத்து கட்டிட வேலை பார்த்து கொண்டிருந்த ரோசல்பட்டியை சேர்ந்த கார்த்திக்ராஜா, முருகன், ஜக்கம்மா மற்றும் ஜெயசூர்யா உள்ளிட்ட 4 பேர் வேகமாக கட்டிடத்தின் மாடியிலிருந்து இறங்க முயற்சித்தனர்.
அதற்குள் மின்னல் தாக்கி 4 பேரும் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்து வந்த தீயணைப்புத்துறையினர் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல்கண்காணிப்பாளர் மனோகர் நேரில் வந்து பார்வையிட்டார். இது குறித்து விருதுநகர் ஊரக காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து இழப்பீடு வழங்கப்பட உள்ளது.
newstm.in