சோகம்! வண்டலூர் பூங்காவில் வெள்ளை புலி உயிரிழப்பு!!

சோகம்! வண்டலூர் பூங்காவில் வெள்ளை புலி உயிரிழப்பு!!

Update: 2022-03-24 10:18 GMT

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவந்த பெண் வெள்ளை புலி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

கடந்த 2009ஆம் ஆண்டு இப்பூங்காவில் பிறந்த இந்த பெண் வெள்ளை புலி கடந்த இரண்டு வாரங்களாக 'அட்டாக்சியா' எனப்படும் கை, கால்களில் ஏற்படும் தசை சார்ந்த பிரச்னையால் அவதிப்பட்டு வந்தது.

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த புலி, கடந்த இரு தினங்களாக சரிவர உணவு உட்கொள்ளாமல் இருந்த நிலையில் இன்று உயிரிழந்தது. 13 வயதுடைய ஆகான்ஷா என்ற பெண் வெள்ளை புலி உடல்நலகுறைவால் உயிரிழந்ததாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வெள்ளை புலியை காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனளிக்கவில்லை.  இதைத் தொடர்ந்து கால்நடை மருத்துவர்களால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

newstm.in

Similar News