சோகம்.. இறந்த மகளின் உடலை 10 கி.மீ. தோளில் சுமந்து சென்ற தந்தை- வீடியோ !!

சோகம்.. இறந்த மகளின் உடலை 10 கி.மீ. தோளில் சுமந்து சென்ற தந்தை- வீடியோ !!

Update: 2022-03-26 10:15 GMT

அரசு மருத்துவமனையில் உயிரிழந்த மகளின் உடலை பத்து கிலோ மீட்டர் தூரம் தோளில் தந்தை சுமர்ந்துசென்ற துயர சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

சத்தீஸ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டத்தில் உள்ள ஆம்தாலா கிராமத்தில் ஈஸ்வர் தாஸ் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர், உடல்  நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தனது மகள் சுரேகாவை, அங்குள்ள சுகாதார மையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

சிறுமிக்கு காய்ச்சல் இருந்ததால், கடந்த சில நாட்களாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் சிறுமியின் ஆக்ஸிஜன் அளவு மிகவும் குறைவாக இருந்ததால், சுகாதார மருத்துவ மையத்தில் அவரது உடல்நிலை மோசமடைந்து நிலையில் சிறுமி உயிரிழந்தார்.

இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த ஈஸ்வர் தாஸ் பெரும் சோகத்தில் ஆழ்ந்தார். இதனையடுத்து உயிரிழந்த மகளின் உடலை வீட்டீற்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் கோரியுள்ளனர். அப்போது, மற்றொரு சடலம் விரைவில் வரும், அதுவரை காத்திருக்குமாறு அங்குள்ள பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  

எனினும் நீண்ட நேரம் காத்திருந்த ஈஸ்வர் தாஸ், பின்னர் இறந்த தமது மகளின் உடலை தோளில் சுமந்தவாறு 10 கிலோ மீட்டர் தூரம் உள்ள கிராமத்தை நோக்கி சாலையில் நடந்து சென்றுள்ளார். 

மகளின் உடலுடன் தந்தை சாலையில் நடந்துசென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து இந்த துயர சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சிங் தியோ உத்தரவிட்டுள்ளார்.

 


 

newstm.in

Similar News