சோகம்.. வேலை கிடைக்காத விரக்தி.. தேசிய கபடி வீராங்கனை தற்கொலை..!

சோகம்.. வேலை கிடைக்காத விரக்தி.. தேசிய கபடி வீராங்கனை தற்கொலை..!

Update: 2022-03-23 12:50 GMT

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த மதனந்தபுரம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவருடைய இளைய மகள் பானுமதி (25) எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். அத்துடன், மாநில மற்றும் தேசிய அளவிலான கபடி போட்டியில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளார்.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற கபடி போட்டியில் பங்கேற்று விட்டு நேற்று காலை வீடு திரும்பியுள்ளார். மதியம், வீட்டின் அறையில் பானுமதி தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, பானுமதியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பானுமதியின் உடலை போரூரில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கபடி வீராங்கனை பானுமதி, வேலை கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டிருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

அத்துடன், அவரது தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News